தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பாகக் கொண்டாட்டம்!
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் இன்று முப்பெரும் விழா மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புத் திருப்பலியுடனும் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் தந்தை அருள்திரு எம். இதயராஜ் அவர்களின் பிறந்தநாள் விழா (07-09-2026), உதவித் தலைமையாசிரியர் அருள்திரு ஏ. ஆரோக்கியசாமி அவர்களின் நாம விழா (பெயர் பெருவிழா) மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் அருள்திரு முனைவர் சவரி சேசுராஜ் அவர்களின் 100-வது நாள் பணியேற்பு சிறப்பு விழா ஆகிய மூன்றும் ஒருங்கிணைக்கப்பட்டு முப்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டன.
தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் மூத்த குருவான அருள்திரு சுந்தரராஜ் அவர்கள் தலைமை தாங்கி சிறப்புத் திருப்பலியை நிறைவேற்றி, விழா நாயகர்களுக்கும் பள்ளி குடும்பத்தினருக்கும் அருளுரையும் வாழ்த்துகளையும் வழங்கினார்.
தொடர்ந்து நடைபெற்றப் பாராட்டு விழாவில், முப்பெரும் விழா நாயகர்களுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் பொன்னாடைகள் போர்த்தப்பட்டு, சிறப்புப் பரிசுகளும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், ஆரோக்கிய மாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்று தங்கள் நாம விழாவைக் கொண்டாடும் ஆசிரியர்களான:
* ஆசிரியர் ஆரோக்கியசாமி பிரிட்டோ
* ஆசிரியை ஆரோக்கிய தேவி
* ஆசிரியை ஆரோக்கிய இசபெல்லா
* ஆசிரியை ஆரோக்கிய மேரி
* ஆசிரியர் லியோ ஆரோக்கியராஜ்
ஆகியோருக்கும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டு, வாழ்த்துகளும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.
இவ்விழாவில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.























0 Comments