தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் மாதத்தின் முதல் வெள்ளி திருப்பலி மற்றும் மன்றங்கள் தொடக்க விழா!
தஞ்சாவூர்:
பள்ளியின் தலைமை ஆசிரியர் தந்தை அருட்திரு சவரி சேசுராஜ் அவர்களின் சீரிய முயற்சியாலும் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் அருள்திரு A ஆரோக்கியசாமி அவர்களின் உதவியாலும்
தஞ்சாவூர் தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை சிறப்புத் திருப்பலியும், மன்றங்கள் மற்றும் இயக்கங்களின் அறிமுக விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக நடைபெற்ற மாதத்தின் முதல் வெள்ளி சிறப்புத் திருப்பலியை, பள்ளியின் தாளாளர் அருள்திரு M. இருதயராஜ் அவர்கள் சிறப்பாக தலைமை தாங்கி வழிநடத்தினார். இத்திருப்பலியானது, பள்ளியின் முன்னாள் தாளாளர் அருட்தந்தை ஜெரோம் ஆரோக்கியராஜ் அவர்களின் ஆன்ம அமைதிக்காகவும், நினைவஞ்சலியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியைத் தொடர்ந்து பள்ளியின் பல்வேறு மன்றங்கள் மற்றும் இயக்கங்கள் (Clubs & Movements) மாணவர்களுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, பள்ளியின் இளங்கலை அறிவியல் ஆசிரியர் திரு. X. பிரபு அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், "தற்காலத்தில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும், அவற்றை சரியான வழியில் எவ்வாறு எதிர்கொண்டு சரி செய்வது" என்பது குறித்தும் மாணவர்களுக்கு மிகத் தெளிவாகவும் எழுச்சியூட்டும் வகையிலும் கருத்துரையாற்றினார்.
பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பங்கேற்புடன் இந்நிகழ்வு மிகவும் சிறப்பாக நிறைவுற்றது.





























0 Comments